Monday, 9 July 2012

உதிரும் மலர்களுக்காகத்தான்

உதிரும் மலர்களுக்காகத்தான்
மலர்ச்செடிகள் வருந்தின-ஆனால்,
மலரும் உன் நினைவுகளால்
மரணவலி என் இதயத்தில்...

மலர்களின் வாசமா எந்தன் நேசம்
மரணம் வந்ததும் மாறிப்போவதற்கு,
மாட்டேன் என்றாலும் மறைக்க முயன்றாலும்
மறுபடியும் தோன்றும் மறக்கமுடியா நினைவுகள்சில...

பிடித்தவற்றை சொன்னேன் உன்னிடம்
உயிரற்றதைப்போல் இன்றுவரை பதிலில்லை
எல்லாவற்றிலும் ஏமாந்த எனக்கு
உன் பதில்கூட புதிதில்லை
இருப்பினும் அதிகமாய் அழுகிறது இதயம்
அளவுமீறிய பாசமா??? புரியவில்லை...

No comments:

Post a Comment